Tamil transcript of AEDC family awareness video

Transcript of Awareness for Families video (3:03)

Narrator


ஆஸ்திரேலிய ஆரம்பகால வளர்ச்சிக் கணக்கெடுப்பு (AEDC) என்பது ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி குறித்த, நாடு தழுவிய தகவல்களின் தொகுப்பாகும்.

குழந்தைகளுக்கான ஆரம்பகால மேம்பாட்டுக் கருவியின் ஆஸ்திரேலியப் பதிப்பை ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளுக்கான முழுநேரப் பள்ளிப்படிப்பின் முதலாம் ஆண்டில் நிறைவுசெய்கிறார்கள்.

ஆரம்பகால மேம்பாட்டுக் கருவியின் ஆஸ்திரேலியப் பதிப்பு குழந்தைகளின் வளர்ச்சியை பின்வரும் வழிகளில் அளவிடுகிறது:

உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, சமூகத் திறன், உணர்வுகளில் முதிர்ச்சி, மொழி மற்றும் புரிதல் திறன் (பள்ளி அடிப்படையில்), தொடர்பாற்றல் திறன் மற்றும் பொது அறிவு.

வகுப்பறையில் குழந்தைகளின் கவனிக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், தங்கள் வகுப்பிலுள்ள குழந்தைகளுக்கான மேம்பாட்டுக் கருவியை நிறைவு செய்கிறார்கள்.

சுகாதாரம், கல்வி மற்றும் சமூகக் கொள்கை மேம்பாடு மற்றும் திட்டமிடல் போன்றவற்றுக்கு உதவிபுரியும் தகவல்களை AEDC (ஆஸ்திரேலிய ஆரம்பகால வளர்ச்சிக் கணக்கெடுப்பு) வழங்குகிறது.

சேகரிக்கப்பட்ட தகவல்கள், எது சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் மற்றும் குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் உதவிடும் வகையில் எதில் திருத்தங்கள் தேவை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

பள்ளியில் பயிலும் ஆண்டுகளில் மதிப்பீடு செய்யப்படும் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு சார்ந்த கல்வியில் வெற்றி பெறுவதற்கான குறிப்பையும் AEDC வழங்குகிறது.

பள்ளியில் குழந்தைகள், களங்களுக்கு எதிராக எவ்வாறு வளர்ந்து வருகிறார்கள் என்பதை ஒரு சிறு கண்ணோட்டமாக AEDC தரவு வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட குழந்தைக்காகத் தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை, ஆனால் ஒன்றிணைந்த குழுவாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சியை ஒரு சிறு கண்ணோட்டமாக AEDC வழங்குகிறது. அது குழந்தைகளுக்கான ஒரு குழுவுக்குத்தான் வழங்குகிறதேயன்றி ஒவ்வொரு குழந்தைக்கும் அல்ல.

பள்ளி, சமூகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் அறிக்கைகள் கிடைக்கப்படுகின்றன.

மாநிலம், சமூகம் மற்றும் தேசிய அறிக்கைகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன.

சேகரிப்பு நிறைவடைந்ததும் பள்ளிகளுக்குச் சுருக்கமான அறிக்கை கிடைக்கும்.

முதலாம் பருவ முடிவில் உங்கள் குழந்தை AEDC -இல் பங்கேற்பது குறித்த மேலதிகத் தகவல்களைப் பள்ளி வழங்கும்.

உங்கள் குழந்தைக்கான கருத்தாய்வை ஆசிரியர் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், பள்ளி முதல்வரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

AEDC கருத்தாய்வு முடிவுகள் அனைத்து நிலை அறிக்கைகளிலும் சுருக்கமான விழுக்காடுகளில் தெரிவிக்கப்படும்.

தனிப்பட்ட மாணவரின் இரகசியம் மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்குப் பள்ளிகள் திட்டமிட வேண்டும்.

உங்கள் குழந்தையைப் பங்கேற்க வைத்துக் கருத்தாய்வை நிறைவு செய்வதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அனுமதிப்பது, அதன் முடிவுகளை நாங்கள் பெறுவதுக்கு மிகவும் முக்கியமாகும்.

பள்ளி முதல் ஆண்டில் குழந்தைகளின் வளர்ச்சியில் எவ்வாறு சிறந்த முறையில் ஆதரவளிப்பது என்பதைப் புரிந்து கொள்ளவும், அத்துடன் குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை எவ்வாறு சிறந்த முறையில் ஆதரவளிப்பது என்பதைத் திட்டமிடவும் பள்ளிகள், சமூகங்கள் மற்றும் அரசுகளுக்கு உதவுகின்றன.

முன் எப்போதையும் விட இப்போது குழந்தைகளின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் ஒரு முக்கிய முன்னுரிமையாகும்.

மேலதிக விவரங்கள் AEDC தேசிய இணையதளத்தில் கிடைக்கப்பெறுகின்றன

உங்களுக்கு மேலும் ஏதாவது கேள்விகள் இருந்தால், பள்ளி முதல்வர் மற்றும் AEDC பள்ளி ஒருங்கிணைப்பாளரிடம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

End of Transcript.

Return to top of page Back to top